Friday 22 August 2008

மேயர் பொன் சிவபாலன் 10வது ஆண்டு நினைவு: மனித உரிமை மீறல்களை எதிர்கொள்ளல்

யாழ் மேயராக இருந்து படுகொலை செய்யப்பட்ட பொன்னுத்துரை சிவபாலனின் பத்தாவது ஆண்டு நினைவு தினம் லண்டனில் செப்ரம்பர் 14ல் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. 1988 செப்ரம்பர் 11ல் நடைபெற்ற குண்டுத் தாக்குதலில் மேயர் பொன் சிவபாலன் உட்பட 13 பேர் கொல்லப்பட்டனர். யாழ் நகர மண்டபத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றது. இப்படுகொலைச் சம்பவம் இடம்பெற்று 10வது ஆண்டு நிறைவையும் சர்வதேச மனித உரிமைப் பிரகடனம் செய்யப்பட்ட 60வது ஆண்டு தினத்தையும் குறிக்கும் வகையில் மேயர் பொன்சிவபாலனின் நினைவு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. ‘மேயர் பொன் சிவபாலன் நினைவு : மனித உரிமை மீறல்களை எதிர்கொள்ளல்’ என்ற தலைப்பில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. தேசம் சஞ்சிகையினால் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ள இந்நிகழ்விற்கு பொன் சிவபாலனால் அரசியலுக்கு அழைத்துவரப்பட்ட எஸ் சுதாகரன் தலைமை தாங்குகிறார்....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
மேயர் பொன் சிவபாலன் 10வது ஆண்டு நினைவு: மனித உரிமை மீறல்களை எதிர்கொள்ளல்

No comments: