ஓகஸ்ட் 10ல் குவாக்கர்ஸ் மண்டபத்தில் (லண்டன் லேய்டன்ஸ்ரோன்) கனடியத் தமிழர்களால் தயாரிக்கப்பட்ட ‘சகா’ என்ற படம் காண்பிக்கப்பட இருக்கிறது. ஈழ நண்பர்கள் திரைக்கலை அமைப்பும் தேசம் சஞ்சிகையும் ஈழவர் திரைக்கலை மன்றமும் இணைந்து இக்குறும்படக் காட்சியை ஏற்பாடு செய்துள்ளன.
இக்குறும்படக் காட்சி நிகழ்வில் சகா திரைப்படம் தொடர்பான கலந்துரையாடலும் இடம்பெறும். மேலும் அடுத்த குறும்படக்காட்சி பற்றிய கலந்துரையாடலும் மேற்கொண்டு இவ்வாறான நிகழ்வுகளை எவ்வாறு சூழற்சி முறையில் கொண்டு செல்வது என்பது பற்றியும் ஆராயப்படும். வர்த்தக சினிமாவுக்கு அப்பால் உள்ள சினிமாவுடன் அறிமுகமாக விரும்புபவர்களையும் ஏற்கனவே மாற்று சினிமாவில் தங்களை ஈடுபடுத்தி உள்ளவர்களையும் ஏற்பாட்டாளர்கள் வரவேற்கின்றனர்.
முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
கிழக்கு லண்டன் இலவச படக்காட்சி : த ஜெயபாலன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment